சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் சம்பளம் குறித்த பட்டியல்!

Updated: Mon, May 24 2021 18:38 IST
Image Source: Google

விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் யார் என்ற பட்டியல் வருடா வருடம் வெளியிடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் கேப்டன்கள் பட்டியலை வியோன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் கேப்டன்கள் பட்டியல் இதோ:

1. ஜோ ரூட் - இங்கிலாந்து

உலகில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு ஆண்டொன்றிற்கு ரூ.8.97 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

2. விராட் கோலி - இந்தியா

இப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.7 கோடி சம்பளமாக வழங்குகிறது பிசிசிஐ.

3. ஆரோன் ஃபின்ச் / டிம் பெய்ன் - ஆஸ்திரேலியா

இப்பட்டியலில் மூன்றும் மற்றும் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர்கள் ஆஸ்திரேலிய ஒருநாள் & டி20 கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன். இவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 4.87 கேடி சம்ளமாக வழங்கப்படுகிறது. 

5.டீன் எல்கர்- தென்ஆப்பிரிக்கா

இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடிப்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர். இவரது ஆண்டு சம்பளம் ரூ.3.3 கோடி.

6. டெம்பா பவுமா - தென்ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் & டி20 அணிகளின் கேப்டன் டெம்பா பவுமா. இவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.5 கோடியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சம்பளமாக வழங்குகிறது. 

7. கேன் வில்லியம்சன் - நியூசிலாந்து

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்னிற்கு இப்பட்டியலில் ஏழாவது இடம் கிடைத்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமான ஒன்றுதான். ஏனெனில் இவரத் தலைமையிலான நியூசிலாந்து அணி 2019 உலக கோப்பை மற்றும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரர் கேன் வில்லியம்சன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.77 கோடியை சம்பளமாக பெறுகிறார். 

8. ஈயான் மோர்கன் - இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் ஒருநாள், டி20 அணிகளின் கேப்டன் ஈயான் மோர்கன். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தான் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இவருக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.75 கோடி சம்ளமாக வழங்கப்படுகிறது. 

9. கிரேன் பொல்லார்ட் - வெஸ்ட் இண்டீஸ்

இப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பெறுபவர் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள், டி20 கேப்டன் கிரேன் பொல்லார்ட். இவருக்கு சம்பளமாக ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.73 கோடி வழங்கப்படுகிறது. 

10. பாபர் ஆசாம் - பாகிஸ்தான்

இப்பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடிப்பவர் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு கிடைத்துள்ளது. இவருக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.62.40 சம்பளமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது.

TAGS