உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணியின் பயணம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை நடத்தி வருகிறது.
இத்தொடரின் இறுதி போட்டிக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளன.
Trending
இரு அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற விளையாட்டு மைதானமான லர்ட்ஸில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை குறித்து சில தகவல்களை காண்போம்..!
நியூசிலாந்து vs இலங்கை -2019
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - 2019/20
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஆனால் இத்தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்து, ஆஸ்திரேலிய அணியிடன் ஒயிட்வாஷ் ஆனது .
இந்தியா vs நியூசிலாந்து -2020
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - 2020
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
நியூசிலாந்து vs பாகிஸ்தான் - 2020/21
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து 2-0 என்ற கணகில் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலில் 420 புள்ளிகளை பெற்றது.
இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாகவும் தேர்வானது.