About test
WTC : இரண்டு புள்ளிகளை இழந்த இந்தியா - இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோனது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொண்டன.
இந்நிலையில் முதல் டெஸ்டில் இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் பெற்ற 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை ஐசிசி நீக்கியுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் 2ஆவது டெஸ்டில் நாளை விளையாடவுள்ளன. இதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் குறைவான ஓவர்களை வீசியதற்காக இரு அணிகளுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்தும் 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on About test
-
ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND: லண்டனில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND : இரண்டாவது டெஸ்டிலும் அஸ்வின் விளையாடுவது சந்தேகம்?
இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற மாட்டார் எனத்தெரிகிறது. ...
-
ENG vs IND: இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: லண்டன் சென்றடைந்த இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது. ...
-
புஜாராவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்க - பிராட் ஹாக் ஆலோசனை!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புராஜா இடத்தில் சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND 1st Test: மழையால் கைநழுவி போன இந்திய அணியின் வெற்றி!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
ENG vs IND, 1st test : மழையால் கைநழுவும் ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது. ...
-
இந்த காரணத்தினால் தான் அஸ்வினுக்கு பதில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் - ஜாஹீர் கான்!
அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ENG vs IND 1st Test, Day 5: வெற்றியை வசமாக்குமா இந்திய அணி?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது. ...
-
ENG vs IND, 1st Test Day 4: ரோஹித், புஜாரா நிதான ஆட்டம் !
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND : சதமடித்த ரூட்; இந்தியாவுக்கு 208 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இரண்டு ஆண்டுகளாக நான் இதைத்தான் செய்துவந்தேன் - கேஎல் ராகுல்
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் தனது ஆட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31