Eng vs ind 3rd test
சாதனையை நோக்கி காத்திருக்கும் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் பும்ரா - ஷமி ஆகியோரின் பேட்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. இதனால் லீட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்தியதே இதுநாள்வரை சாதனையாக இருந்தது. லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் பும்ரா 100 விக்கெட்டுகளை எடுத்துவிட்டால், குறைந்த டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற சாதனையை பெறுவார்.
Related Cricket News on Eng vs ind 3rd test
-
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது. ...
-
ENG vs IND: மூன்றாவது டெஸ்டில் அஸ்வின்?
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND : மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாலன் சேர்ப்பு!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31