Advertisement

ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஓர் பார்வை!

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்ர் ஷுப்மன் கில் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டைன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

Advertisement
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஓர் பார்வை! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 18, 2024 • 07:47 PM

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ முறியாக மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்ர் ஷுப்மன் கில் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டைன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 18, 2024 • 07:47 PM

குஜராத் டைட்டன்ஸ்

Trending

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்றது. எனினும் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த இரு சீசனினும் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், தனது ஆல்ரவுண்ட் திறனாலும் அணிக்கு பெரிய பலமாக இருந்தார். ஆனால் இம்முறை ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதுடன் அந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு இளம் அதிரடி பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது முறையாக இந்த சீசனிலும் இறுதிப்போட்டிக்கு செல்வதுடன், மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலம்

கடந்த இரண்டு சீசன்களிலும் இறுதிப்போட்டிவரை முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனிலும் அதே உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு சென்றாலும், அவரது இடத்தை நிரப்பும் வீரர்களை தங்கள் வசம் வைத்துள்ளது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ஷாரூக் கான், ஸ்பென்சர் ஜான்சன், ராபின் மின்ஸ் போன்ற வீரர்களையும் வாங்கி தங்கள் அணியின் பலத்தை கூட்டியுள்ளது. அதுபோக இளம் அதிரடி வீரர் ஷுப்மன் கில்லின் கேப்டன்ஸியின் கீழ் குஜராத் அணி சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

நடப்பு சீசனுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் நட்சத்திர பட்டாங்கள் உள்ளன. ஷுப்மன் கில், டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா ஆகியோர் தொடர்ச்சியாக தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், ஷாருக் கான், சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோரும் பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்க்கக்கூடியவர்களாக பார்க்கப்படுகின்றன. கடந்த சீசனில் ஷுப்மன் கில் 890 ரன்கள் குவித்திருந்தார். அதேபோன்றதொரு செயல்திறனை தொடரச் செய்வதில் ஷுப்மன் கில் முனைப்பு காட்டக்கூடும். டேவிட் மில்லர், மேத்யூ வேட் ஆகியோர் ஒரு சில பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.

அவர்களுடன் தற்போது அஸ்மதுல்லா ஒமார்ஸாய், ஷாருக் கான், ராபின் மின்ஸ் போன்ற வீர்ரர்களும் இணைந்துள்ளது அணியின் பேட்டிங் வலிமையை காட்டுகிறது. இதையடுத்து அணியின் பந்துவீச்சு துறையை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வழிநடத்தவுள்ளார்ர். அவருடன் நூர் அஹ்மத், ஜோஷுவா லிட்டில், மொஹித் சர்மா, சாய் கிஷோர், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரும் பந்துவீச்சை வலிமைப்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலோரின் எதிர்பார்ப்புகள் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் பக்கம் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலம்

முந்தைய சீசன்களில் குஜராத் அணியின் வெற்றியில் பந்துவீச்சும் பிரதான பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் இம்முறை அந்த அணியின் பந்துவீச்சு துறைதான் அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா வெறு அணிக்கு சென்றுவிட்ட நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே விலகிவிட்டார். கடந்த இரண்டு சீசன்களிலும் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு சென்றதில் ஹர்திக் மற்றும் ஷமியின் பங்கு முக்கியமானதாகும். ஆனல் இந்த சீசனில் இருவருமே இல்லை என்பது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானும் தனது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போதுதான் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். இதனால் அவர், உடனடியாக சிறந்த பார்மை எட்டுவது சவாலாக இருக்கும். மேற்கொண்டு ஜோஷுவா லிட்டில், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் அணியில் உள்ள போதிலும் இவர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவார்களா என்பது சந்தேகமே. இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் வரலாறு

  • 2022 - சாம்பியன்
  • 2023 - ரன்னர் அப் (இரண்டாம் இடம்)

குஜராத் டைட்டன்ஸ் அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், ஷாருக் கான், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் திவேத்தியா, அஸ்மதுல்லா ஓமர்சாய், மானவ் சுதர், நூர் அஹ்மத், சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷுவா லிட்டில், மோஹித் சர்மா, தர்ஷன் நல்கண்டே, உமேஷ் யாதவ், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, ஸ்பென்சர் ஜான்சன்.

குஜராத் டைட்டன்ஸ் போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மார்ச் 24: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அஹ்மதாபாத்
  • மார்ச் 26: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், சென்னை
  • மார்ச் 31: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அஹ்மதாபாத்
  • ஏப்ரல் 04: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், அஹ்மதாபாத்
  • ஏப்ரல் 07: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், லக்னோ 

Advertisement

Advertisement