%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
ஹெலிகாப்டர் ஷாட்டை பயிற்சி செய்யும் ஜோஸ் பட்லர்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவடு சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் தொடரை வெற்றியுடன் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி, அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், அவர் வலை பயிற்சியின் போது ஹெலிக்காப்டர் ஷாட்டுகளை விளையாடி பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் அவர் ஹெலிகாப்டர் ஷாட்டுகளை விளையாடிய காணொகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ரச்சின் ரவீந்திராவிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டாரா விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது அறிமுக ஆட்டத்திலேயே ஆபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவை முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். ...
-
'मुझे लगता है कि गायकवाड़ की कप्तानी बहुत प्रभावशाली थी': सुनील गावस्कर
Chennai Super Kings: नई दिल्ली, 23 मार्च (आईएएनएस) पूर्व भारतीय क्रिकेट दिग्गज सुनील गावस्कर ने चेन्नई सुपर किंग्स के लिए रुतुराज गायकवाड़ की कप्तानी की शुरुआत की सराहना की, और ...
-
என் மீது எவ்விதமான அழுத்தமும் ஏற்படுத்தவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
மற்ற உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருப்பதால் என்னால் கடினமான சூழல் ஏற்பட்டாலும் என்னாலும் அதை சரியாக கையாள முடியும் என்றே கருதுகிறேன் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பவுண்டரிகளை பறக்கவிட்ட பேட்டர்கள்; ஆர்சிபியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
-
நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்!
தொழில்முறை கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது முதல் ஆட்டத்தை நாளை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய ரஹானே!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி வீரர் அஜிங்கியா ரஹானே பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
IPL 2024: बाउंड्री के पास रहाणे की चतुराई से विराट कोहली इस तरह हो गए कैच आउट, देखें…
आईपीएल 2024 के पहले मैच में रॉयल चैलेंजर्स बेंगलुरु के विराट कोहली चेन्नई सुपर किंग्स के मुस्तफिजुर रहमान की गेंद पर कैच आउट हो गए। ...
-
ஐபிஎல் 2024: அடுத்தடுத்து சம்பவம் செய்த முஸ்தஃபிசூர், தீபக் சஹார்; ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
கடந்த சீசனில் இருந்து எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31