England tour india 2024
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on England tour india 2024
-
எங்களது செயல்பாடுகள் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை - ஜோ ரூட்!
எங்கள் பேட்டிங் வரிசை, முழுவதுமான நிலைத்தன்மை மற்றும் சில தனிப்பட்ட செயல்பாடுகள் அதற்கு முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
கும்ப்ளே, வார்னே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு?
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதுப்பிக்கப்பட்ட்ட பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் - துருவ் ஜுரெல்!
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும், அதனையே நானும் இப்போட்டியில் செய்தேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இந்தத் தொடர் எங்களுக்கும் இந்தியாவுக்கும் நிறைய திறமையான இளம் வீரர்களை அடையாளப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்கூறியுள்ளார். ...
-
இத்தொடரில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இளம் வீரர்களை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: ஷுப்மன், ஜுரெல் சிறப்பான ஆட்டம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
-
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 74 ரன்கள் தேவைப்படுகிறது. ...
-
4th Test Day 3: அஸ்வின், குல்தீப் சுழலில் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 192 ரன்கள் என்ற எளிய இலக்கை விராட்டும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியில் அடுத்த தோனி உருவாகி வருகிறார் - ஜுரெலை பாராட்டிய கவாஸ்கர்!
துருவ் ஜுரெல்லை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகுவதை போல் தோன்றுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
4th Test Day 3: சதத்தை தவறவிட்ட துருவ் ஜுரெல்; 307 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31