India tour zimbabwe
ZIM vs IND, 1st T20I: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே; போராடி வீழ்ந்தது இந்தியா!
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயாம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா மற்றும் வெஸ்லி மதேவெரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னசெண்ட் கையா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மதேவெராவுடன் இணைந்த பிரையன் பென்னெட் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 23 ரன்களில் பிரையன் பென்னெட்டும், 21 ரன்களில் வெஸ்லி மதேவெராவும் விக்கெட்டை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் தியான் மேயர்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் சிக்கந்தர் ரஸா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானதன் காம்பெல் முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்ட, ஜிம்பாப்வே அணியானது 74 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் தியான் மெயர்ஸும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெலிங்டன் மஸகட்ஸாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on India tour zimbabwe
-
ZIM vs IND, 1st T20I: பிஷ்னோய், வாஷிங்டன் சுழலில் 116 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ZIM s IND, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனை படைக்குமா இளம் இந்திய அணி?
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
IND vs ZIM 1st T20I: ध्रुव जुरेल या जितेश शर्मा... कौन होगा इंडिया का विकेटकीपर? Sanju Samson नहीं…
IND vs ZIM 1st T20I: संजू सैमसन पहले दो मैचों के लिए टीम में शामिल नहीं है, ऐसे में फैंस के मन में ये सवाल है कि इंडियन टीम के ...
-
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்குவார் என்று கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Zimbabwe, India Look To Future In T20 Series
Zimbabwe and India will be looking to the future when they start a five-match Twenty20 international series at the Harare Sports Club on Saturday. All the matches will be played ...
-
IND vs ZIM T20I Series: டி20 தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பது எப்படி? முழு தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஜூன் 06ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பதற்கான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ...
-
IND vs ZIM T20I Series: अब फ्री में नहीं देख पाओगे इंडिया के मैच, यहां जानें लाइव स्ट्रीमिंग…
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं कि आप IND vs ZIM टी20 सीरीज कैसे और कहां पर देख पाओगे। ...
-
IND vs ZIM T20I: क्या हरारे में पहला टी20 मैच खेल पाएंगे RINKU SINGH? बारबाडोस में फंस गई…
IND vs ZIM टी20 सीरीज के शुरू होने से पहले एक अच्छी खबर सामने आई है। रिंकू सिंह जिम्बाब्वे के लिए निकल गए हैं और जल्द ही टीम के साथ ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஜூலை 06ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
फिर मुसीबत में फंसने वाले थे RIYAN PARAG! IND vs ZIM सीरीज से पहले दिमाग की बत्ती हो…
रियान पराग जिम्बाब्वे के टूर पर जाने से पहले एक बड़ी मुश्किल में फंस सकते थे, लेकिन वो आखिरी समय में बाल बाल बचे। ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஷிவம் தூபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31