Advertisement
Msl: Cricket News & Match Updates
Advertisement
வயதானவர்களுக்கான கிரிக்கெட் தொடரை தொடங்கும் அஃப்ரிடி!
கிரிக்கெட் உலகில் பல்வேறு லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்தியன் ப்ரிமீரியர் லீக். பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக். வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் ப்ரிமீரியர் லீக் தொடர் என நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடிய முன்னாள் வீரர்கள் மட்டுமே விளையாடும் லீக் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார் அஃப்ரிடி.
தற்போது 42 வயதான அஃப்ரிடி கடைசியாக குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடினார். அதுவே இந்த லீக் தொடரில் தனது கடைசி தொடர் என தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட், 398 ஒருநாள், 99 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டி20 ஜெயண்ட் என அறியப்படுபவர் அவர். ஆல்-ரவுண்டரும் கூட. Read More...
Related Cricket News for Msl - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement