Nicholas kirton: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தலிவால், கிர்டன் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் முதல் போட்டியில் குரூப் ஏ குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் அமெரிக்க அணியும், கனடா அணியும் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். அதிலும் இப்போட்டியை பவுண்டரி அடித்து தொடங்கிவைத்த ஆரோன் ஜான்சன் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பர்காத் சிங் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் கனடா அணி 66 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Nicholas kirton - Tesst
T20 World Cup: Canada Wants To Win Few Games; The Side Is Capable Of Doing It, Says Coach Dassanayake
T20 World Cup: Canada, Namibia, Oman Win Warm-up Matches
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31