Rcb rcb
எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன் - விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களையும், ராஜத் பட்டிதார் 57 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங் உள்ளிட்ட வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Related Cricket News on Rcb rcb
-
எங்களது வெற்றியை நாங்கள் இப்படியே தொடர விரும்புகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம் என எங்களுக்குள் பேசினோம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆக்ரோஷம் தேவை என முடிவு செய்து அதற்கு தகுந்தார்போல் விளையாடினோம் என்று ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் - சாம் கரண்!
ஐபிஎல் தொடரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவைத் தகர்த்தது ஆர்சிபி !
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட விராட் கோலி; பஞ்சாப் கிங்ஸிற்கு 242 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அறிமுக போட்டியில் அசத்திய வித்வாத் கவெரப்பா - வைரல் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய வித்வாத் கவெரப்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நாங்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
கடந்த சில போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலும் நல்ல முன்னேற்றமடைந்துள்ளோம் என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பவர்பிளேவில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
நாங்கள் பவர் பிளேவில் பேட்டிங் செய்த விதமும், பவர் பிளேவில் பந்து வீசிய விதமும் மோசமாக இருந்ததாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டூ பிளெசிஸ், கோலி அதிரடி; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி!
என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலை எதிர்கொண்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என தன்னை விமர்சித்தவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, அதுவே எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31