Sameer rizvi
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஆர்வத்துடன் ஏலமெடுத்து வருகின்றனர். இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிதாக நியூசிலாந்து வீரர்களான டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்தனர். மேலும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரரான சமீர் ரிஸ்வி சிஎஸ்கே அணியால் ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள இந்த வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ரச்சின் ரவீந்திரா கூறுகையில், “முதல் முறையாக ஐபிஎல் விளையாடப் போகிறேன். சிறந்த வீரர்களான மகேந்திர சிங் தோனி, ஜடேஜா ஆகியோர் உள்ள சிஎஸ்கே அணியில் இணையவுள்ளதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் நியூசிலாந்து வீரர்கள் நிறைய கூறியுள்ளார்கள். சென்னை ரசிகர்களை நான் நிச்சயம் மகிழ்விப்பேன் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Sameer rizvi
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீர் ரிஸ்வி எனும் இளம் வீரரை ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது. ...
-
IPL Auction 2024: Uncapped Shubham Dubey Sold To DC For Rs 5.8 C, CSK Bags Sameer Rizvi For…
The Chennai Super Kings: Vidarbha all-rounder Shubham Dubey was sold to Delhi Capitals for Rs 5.80 Cr while Chennai Super Kings (CSK) bagged Uttar Pradesh all-rounder Sameer Rizvi for Rs ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31