Tn vs del
முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்திய உனாத்கட்; ரஞ்சி கோப்பை வரலாற்றில் புதிய சாதனை!
ரஞ்சிக் கோப்பை தொடர் டிசம்பர் 13ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் இன்று துவங்கியுள்ள லீக் போட்டி ஒன்றில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள சௌராஷ்டிரா, டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிட்ச் துவக்கத்தில் வேகத்திற்கு சாதகமாக இருந்ததால், சௌராஷ்டிரா அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் முதல் ஓவரிலேயே அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி கெத்து காட்டினார். ரஞ்சிக் கோப்பையில், முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்துவது இதுதான் முதல்முறை. இதற்குமுன், இர்ஃபான் பதான் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
Related Cricket News on Tn vs del
-
ரஞ்சி கோப்பை 2022-23: தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிரா!
ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற்ற தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: டிராவில் முடிந்த தமிழ்நாடு - டெல்லி ஆட்டம்!
ஷாருக் கான் 194 ரன்கள் விளாசிய போதிலும், டெல்லி அணியின் இளம் வீரர் யாஷ் துல் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31