Us open
Advertisement
பிரெஞ்ச் ஓபனை வென்ற நடாலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!
By
Bharathi Kannan
June 06, 2022 • 10:51 AM View: 876
நேற்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 8ஆம் நிலை வீரரான காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். காஸ்பர் ரூட்டை வீழ்த்த நடாலுக்கு 2 மணி நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதராக ஆண்ட்ரெஸ் கிமெனோ 1972 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். 34 ஆண்டுகள் 305 நாட்களில் பிரெஞ்ச் ஓபனை அவர் வென்று இருந்தார். இன்று 36 வயதான நடால் பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் ஆண்ட்ரெஸ் சாதனையை முறியடித்து ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதர் ஆனார்.
Advertisement
Related Cricket News on Us open
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement