West indies tour england 2024
ஷாமர் ஜோசப் விளாசிய இமாலய சிக்ஸர்; வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றது.
இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
Related Cricket News on West indies tour england 2024
-
ENG vs WI, 2nd Test: ஹாட்ஜ், அதானாஸ் அபார பேட்டிங்; முன்னிலை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
புரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் - காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்து இங்கிலாந்தின் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
Pope Leads England To 416 Against West Indies In Second Test
Ollie Pope rode his luck to a hundred as England ended the first day of the second Test against the West Indies at Trent Bridge on Thursday in a commanding ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31