Ajith ram
ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜாம்ஷெட்பூரில் உள்ள கீனன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஷரந்தீப் சிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் விராட் சிங் 40 ரன்களையும், அன்குல் ராய் 46 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, அணியின் கேப்டன் இஷான் கிஷான், குமார் குஷாக்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் ஷாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Ajith ram
-
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: பந்துவீச்சாளர்கள் அசததல்; அடுத்தடுத்து ஆல் அவுட்டான தமிழ்நாடு - ஜார்கண்ட்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணியும் 106 ரன்களில் சுருண்டது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் சண்டிகர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை 204 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் சண்டிகர் அணி 204 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: ரயில்வேஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கொப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய விஜய் சங்கர்; ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தவிர்த்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ...
-
TNPL 2024: நடராஜன், அஜித் ராம் அசத்தல்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி தமிழன்ஸ் அபார வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை 183 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியை 183 ரன்களில் தமிழ்நாடு அணி சுருட்டி அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
பஞ்சாப் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 7ஆண்டுகளுக்கு பின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: அஜித் ராம் அபார பந்துவீச்சு; கடின இலக்கை நோக்கி விளையாடும் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணி 355 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31