Australia tour of zealand
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகளுக்கும் இடையேயன முதல் போட்டி இன்று (அக்டோபர் 1) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் டெவான் கான்வே, டிம் செஃபெர்ட், மார்க் சாப்மேன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த டிம் ராபின்சன் - டேரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டேரில் மிட்செல் 34 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பெவான் ஜேக்கப்ஸும் 20 ரன்னில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த டிம் ராபின்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
Related Cricket News on Australia tour of zealand
-
நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் விலகல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31