Bangladesh tour india 2024
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களில் மாற்றங்களை செய்த பிசிசிஐ!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Bangladesh tour india 2024
-
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31