Bangladesh tour of uae
UAE vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Bangladesh tour of uae
-
UAE vs BAN, 3rd T20I: வ்ங்கதேசத்தை 162 ரன்களில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
UAE vs BAN, 1st T20I: சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன்; யுஏஇ-க்கு 192 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான யுஏஇ அணி அறிவிப்பு; முகமது வசீம் கேப்டனாக நியமனம்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் முகமது வசீம் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
யுஏஇ மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்கான லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
யுஏஇ அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேச அணி இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31