Carribean premiere league
ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி ஏபிடி-யை கண் முன் நிறுத்திய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் 2024இல் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், டிரினிபாகோ நைட் ரைடர்ஸ் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொண்டது, இதில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்படி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 250 ரன்களை குவிக்க, அதனைத்து துரத்திய செயின்ட் கிட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 206 ரன்களை மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியானது இப்போட்டியில் நிலைத்திருக்க ஒரு அட்டகாசமான தொடக்கம் தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் முதல் இரண்டு விக்கெட்டுகளை 18 ரன்களுக்கு இழந்தனர். இதன் பின்னர், எவின் லூயிஸ் மற்றும் மைக்கேல் லூயிஸ் ஆகியோர் அணியின் ரன் விகிதத்தை அதிகரிக்க முயன்றனர் ஆனால் லூயிஸ் 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர் மைக்கேல் லூயிஸுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Related Cricket News on Carribean premiere league
-
'Still Getting Packed Crowds and Amazing Viewership': Brett Lee On Playing In Leagues Post-retirement
Carribean Premiere League: Former Australian pacer Brett Lee feels it is exciting for a cricketer to continue playing cricket after retirement, and seeing the stands filled with crowds brings them ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31