Csg vs ss: Cricket News & Match Updates
TNPL 2024: இறுதிவரை போராடிய சேலம் ஸ்பார்டன்ஸ்; சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 15 ரன்களுக்கும், ஆண்ட்ரே சித்தார்த் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கி அதிரடியாக விளையாடிய டேரில் ஃபெராரியோ 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா அபாரஜித் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Csg vs ss - Tesst
TNPL 2024: அபிஷேக் தன்வர் அசத்தல் ஃபினிஷிங்; சேலம் ஸ்பார்டன்ஸுக்கு 157 டார்கெட்!
டிஎன்பிஎல் 2022: சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் சேப்பாக் அணி அசத்தல் வெற்றி!
டிஎன்பிஎல் 2021: சோனு யாதவ் பந்துவீச்சில் சுருண்ட ஸ்பார்டன்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31