Cwc 2023 points table
ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்குப் பின் நியூசிலாந்து அணியும் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
அதன்ப்டி இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில்டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு துவக்க வீரர் குசால் பெரேரா அதிரடியாக 51, மஹீஷ் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்கள்.மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Related Cricket News on Cwc 2023 points table
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        