Dc vs sw ilt20 2025: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆடம் ரோஸிங்டன் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆடம் ரோஸிங்டன் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குல்பதின் நைப், கேப்டன் சிக்கந்தர் ரஸா, நஜிபுல்லா ஸத்ரான், கலித் ஷா, ஷனகா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Dc vs sw ilt20 2025 - Tesst
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31