Emerging asia cup final
Emerging Asia Cup 2024: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் ஏ அணியை பந்துவீச அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு யசோதா லங்கா - லஹிரு உதாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யசோதா லங்கா ஒரு ரன்னிலும், லஹிரு உதாரா 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நுவநிது ஃபெர்னாடோ, அஹான் விக்கிரமசிங்க ஆகியோரும் சொற்ப ரன்களில் நடைடைக் கட்டினர்.
Related Cricket News on Emerging asia cup final
-
Emerging Asia Cup 2024: இலங்கையை 133 ரன்களில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
Emerging Asia Cup 2024: ஆஃப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஏ அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31