Engw vs banw
ஹீதர் நைட் அரைசதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் லீக் போட்டி இன்று நடைபெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் ருபியா ஹைதர் 4 ரன்னிலும், கேப்டன் நிகர் சுல்தானா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷமிம் அக்தர் மற்றும் சோபனா மோஸ்ட்ரி இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் சோபனா மோஸ்ட்ரி அரைசதம் கடந்தார். அதன்பின் 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷமில் அக்தர் விக்கெட்டை இழக்க, 60 ரன்களுடன் சோபனா மோஸ்ட்ரியும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் ரபெயா கான் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 43 ரன்களைச் சேர்க்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச மகளிர் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Engw vs banw
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலன இங்கிலாந்து அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது இங்கிலாந்து!
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31