Ind b vs ind c
துலீப் கோப்பை 2024: டிராவில் முடிந்தது இந்தியா பி - இந்தியா சி ஆட்டம்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்ச நடத்தி வருகின்றன. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்தும், பாபா இந்திரஜித், மனவ் சுதர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அரைசதமும் கடந்து அசத்த இன்னிங்ஸ் முடிவில் 525 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்களையும், மனவ் சுதர் 82 ரன்களையும் சேர்த்தனர்.
இந்தியா சி அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் - நாராயன் ஜெகதீசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிரபர்க்கப்பட்ட ஜெகதீசன் 70 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முஷீர் கான் ஒரு ரன்னிலும், சஃப்ராஸ் கான் 16 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், நிதீஷ் ரெட்டி 2 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், சாய் கிஷோர் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Ind b vs ind c
-
துலீப் கோப்பை 2024: அபிமன்யூ ஈஸ்வரன் சதம்; தடுமாற்றத்தில் இந்தியா பி அணி!
இந்தியா சி அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: ஜெகதீசன், ஈஸ்வரன் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா பி அணி!
இந்தியா சி அணிக்கு எதிரான லீக் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இஷான் கிஷன், இந்திரஜித் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா சி அணி!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இந்தியா பி vs இந்தியா சி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31