Jammu kashmir vs tamil nadu: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜெகதீசன், அச்யுத் அசத்தல்; தமிழ்நாடு அணி அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ஜம்மூ-காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் துஷார் ரஹேஜா 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து ஜெகதீசனுடன் இணைந்த பாபா இந்திரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். Read More...
Related Cricket News for Jammu kashmir vs tamil nadu - Tesst
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31