Lkk vs itt: Cricket News & Match Updates
TNPL 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபைய ஆட்டத்தில் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் ரஹேஜா விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Lkk vs itt - Tesst
TNPL 2024: சாத்விக், ரஹேஜா அதிரடி; கோவை கிங்ஸிற்கு 201 ரன்கள் இலக்கு!
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
TNPL 2023: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது லைகா கோவை கிங்ஸ்!
TNPL 2023: ஐபிஎல் ஃபார்மை தொடரும் சாய் சுதர்சன்; திருப்பூர் அணிக்கு 180 டார்கெட்!
டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31