Mark adir
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை அப்செட் செய்தது கனடா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் தலிவால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஆரோன் ஜோன்ஸ் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய பர்காத் சிங் 18 ரன்களுக்கும், தில்ப்ரீத் பஜ்வா 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கனடா அணியானது 53 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத்தொடர்ந்து நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஸ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
Related Cricket News on Mark adir
-
முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அதிர், மெண்டிஸ், ஹென்றி ஆகியோர் பரிந்துரை!
மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் விருதிற்கான ஐசிசி பரிந்துரை பட்டியலில் மார்க் அதிர், கமிந்து மெண்டிஸ், மேட் ஹென்றி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ...
-
AFG vs IRE, 3rd ODI: குர்பாஸ், ஷாஹிதி அரைசதம்; அயர்லாந்து அணிக்கு 237 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs AFG, 5th T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற காணக்கில் தொடரையும் வென்றது. ...
-
IRE vs AFG, 2nd T20I: ஆஃப்கானை 122 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 123 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs SA : மார்க் அதிர் பந்துவீச்சில் 165 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31