Mie vs dv ilt20 2025: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிளெட்சர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடருக்க வீரரான முகமது வசீம் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த டாம் பான்டன் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 198 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். Read More...
Related Cricket News for Mie vs dv ilt20 2025 - Tesst
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31