Nam vs sco: Cricket News & Match Updates
T20 WC 2024: பெர்ரிங்டன், லீஸ்க் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு கோட்ஸி - நிகோ டேவின் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கோட்ஸி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜான் ஃபிரைலிங்கும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகோ டேவினும், இரண்டு ரன்கள் எடுத்திருந்த நிலையில் மலான் க்ரூகரும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் - ஸான் கிரீன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய எராஸ்மஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் எராஸ்மஸ் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Nam vs sco - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31