Pak vs nz 5th odi
PAK vs NZ: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் டாம் பிளெண்டல் இணை களமிறங்கினர். இதில் வில் யங் ஒருமுனையில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய டாம் பிளெண்டல் 15 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த ஹென்றி நிகோலஸ் 23 ரன்களிலும் என ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் யங்கும் 87 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
Related Cricket News on Pak vs nz 5th odi
-
PAK vs NZ: பாகிஸ்தானுக்கு 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31