Pthum nissanka
1st Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி நகரும் இலங்கை!
SL vs BAN, 1st Test: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர் பதும் நிஷங்கா 13 ரன்களில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Pthum nissanka
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31