Sa20 2025 final
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Sa20 2025 final
-
எஸ்ஏ20 2025 இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31