Saw vs scow: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வோல்வார்ட், மலபா அசத்தல்; ஸ்காட்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தஸ்கின் பிரிட்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் லாரா வோல்வார்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 64 ரன்களை எட்டியது. Read More...
Related Cricket News for Saw vs scow - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31