Sco vs aus 3rd t20i: Cricket News & Match Updates
SCO vs AUS, 3rd T20I: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி!
ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - ஒல்லி ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒல்லி ஹாரிஸ் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜார்ஜ் முன்ஸி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய பிரண்டன் மெக்முல்லன் வழக்கம் போல் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். Read More...
Related Cricket News for Sco vs aus 3rd t20i - Tesst
3rd T20I: कैमरून ग्रीन का शानदार ऑलराउंड प्रदर्शन, AUS ने SCO को 6 विकेट से हराते हुए सीरीज में किया 3-0 से क्लीन स्वीप
SCO vs AUS, 3rd T20I: மீண்டும் அரைசதம் அடித்த மெக்முல்லன்; ஆஸிக்கு எளிய இலக்கு!
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31