Sediq atal
Advertisement
ஒரே ஒவரில் 7 சிக்சர்களை பறக்கவிட்ட ஆஃப்கான் வீரர்; ருதுராஜ் சாதனை சமன்!
By
Bharathi Kannan
July 30, 2023 • 20:46 PM View: 582
ஆஃப்கானிஸ்தானில் காபூல் பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த காபூல் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷகீன் ஹண்டர்ஸ் மற்றும் அபாஸின் டிஃபெண்டர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி ஆஃப்கானிஸ்தானின் அயோபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஷகீன் ஹண்டர்ஸ் அணியைச் சேர்ந்த செதிகுல்லா அடல் 56 பந்துகளில் 118 ரன்கள் விளாசி அசத்தினார்.
செதிகுல்லா அடல் பேட் செய்தபோது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை வீச வந்தார் அமீர் சசாய். முதல் பந்தை அமீர் ஸஸாய் நோபாலாக வீச அதனை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் செதிகுல்லா. அதன்பின் வைட் வீசி 5 ரன்களை சசாய் விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து ஸஸாய் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தினார் அடல். ஸஸாய் வீசிய அந்த ஓவரில் மட்டும் ஷகீன் ஹண்டர்ஸ் அணிக்கு 48 ரன்கள் கிடைத்தது.
Advertisement
Related Cricket News on Sediq atal
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement