Selection committee
தேர்வுக்குழு பதவிக்கு நான் போட்டியிடவில்லை - ஹேமங் பதானி!
சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இதனால் தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்டுகள் அல்லது 30 முதல்தர ஆட்டங்கள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இதற்கான விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
Related Cricket News on Selection committee
-
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கம் - பிசிசிஐ அதிரடி!
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரையும் பிசிசிஐ நீக்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31