Shreyas iyar
3rd ODI: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய அணியில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கபட்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on Shreyas iyar
-
3rd ODI: ஷுப்மன் கில் சதம்; விராட், ஸ்ரேயாஸ் அரைசதம் - இங்கிலாந்துக்கு 357 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மார்க்கீ பிளேயர் பட்டியலில் ஸ்ரேயஸ், பந்த், ராகுல், அர்ஷ்தீப்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தின் கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர் ரூ.2 கோடியை அடிப்படை தொகையாக கொண்டு தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஓர் பார்வை!
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர்; ஐபிஎல் தொடரிலிருந்து விலகலா?
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தனது முதுகு பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இஷான் கிஷான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக தேர்வு செய்யப்படாமல் இல்லை - ராகுல் டிராவிட்!
இஷான் கிஷான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படாமல் இல்லை என இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கான் தொடரிலிருந்து புறக்கணிக்கப்பட்ட இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர்; பிசிசிஐ கடும் அதிருப்தி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31