South africa tour pakistan 2025
பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 87 ரன்களையும், சௌத் ஷகீல் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சேனுரன் முத்துசாமி 89 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்களையும், காகிசோ ரபாடா 71 ரன்களையும், டோனி டி சோர்ஸி 55 ரன்களையும் சேர்த்தனர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
Related Cricket News on South africa tour pakistan 2025
-
தென் ஆப்பிரிக்கா 404 ரன்களில் ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவதுடெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
நோமன் அலி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ் போட்டியில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
De Zorzi Stands Tall, But Noman Ali’s 4-85 Puts Pakistan in Control
Noman Ali’s 4-85 put Pakistan ahead after De Zorzi’s unbeaten 81 and Muthusamy’s 6-117 on a spin-heavy day in Lahore. ...
-
பாகிஸ்தன் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டி காக்!
பாகிஸ்தான் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , டேவிட் மில்லர், மேத்யூ பிரிட்ஸ்கீக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31