Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமனம்!
நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்றவுள்ள இத்தொடரானது எதிர்வரும் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
NZ Vs SL Zealand Cricket Team Kane Williamson Mitchell Santner Tamil Cricket News Kane Williamson Mitchell Santner Zealand Cricket Team Zealand Cricket Board
Related Cricket News for Tamil cricket news - Tesst
SA vs PAK, 1st ODI: சைம் அயூப், சல்மான் ஆகா அசத்தல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs WIW, 2nd T20I: ஹீலி மேத்யூஸ் அதிரடியில் விண்டீஸ் அணி அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 283 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 283 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: சதத்தை தவறவிட்ட கிளாசென்; சவாலான இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 240 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs WIW, 2nd T20I: மீண்டும் அரைசதமடித்த மந்தனா; விண்டீஸூக்கு 160 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நான் நிச்சயமாக திரும்பி வருவேன் - பிரித்வி ஷா விரக்தி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: சாம் கொண்டாஸ், டேனியல் சாம்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் தடுமாறி வந்த இந்திய அணி டெய்ல் எண்டர்ஸின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஃபலோ ஆனை தவிர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG: ஒருநாள் தொடரில் இருந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ராவீந்திர ஜடேஜா தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கோலி, ஆம்லாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் காயத்தை சந்தித்த ஹேசில்வுட்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement