Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இரானி கோப்பை 2024: இரட்டை சதமடித்து சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கான்!
கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களைச் சேர்த்தது. இந்ந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் அஜிங்கியா ரஹானே 86 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 54 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 97 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Indian Cricket Team Domestic Cricket Irani Cup Rest Of India Sarfaraz Khan Tamil Cricket News Sarfaraz Khan MUM vs ROI Irani Cup 2024 Indian Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
பாபர் ஆசாமிற்கு வாழ்த்து கூறிய ஏபிடி வில்லியர்ஸ்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசாம் விலகியதை அடுத்து, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IRE vs SA, 1st ODI: சதத்தை தவறவிட்ட ரிக்கெல்டன், ஸ்டப்ஸ்; அயர்லாந்துக்கு 272 டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இரானி கோப்பை 2024: இரட்டை சதம் விளாசிய சர்ஃப்ராஸ்; வலிமையான நிலையில் மும்பை அணி!
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா; ஜெய்ஸ்வால், கோலி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேச மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட டேவிட் மில்லர்- காணொளி!
நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் டேவிட் மில்லர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ், குவாலிஃபையர் 1 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!
காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs BAN: இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்ற யஷஸ்வி, சிராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகியோர் இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய மஹீஷ் தீக்ஷனா - வைரலாகும் காணோளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் வெற்றிபெற்று அசத்தியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!
அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிம் சௌதீ இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024 எலிமினேட்டர்: மில்லர் அதிரடியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பார்படாஸ் ராயல்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மீண்டும் விலகினார் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement