Tamil cricket news: Cricket News & Match Updates
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 45 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 79 ரன்கள் எடுத்த நிலையில் பதும் நிஷங்காவும், 20 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேராவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இலங்கை vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பந்துவீசுவதை நான் எப்போதும் விரும்புவேன் - ரியான் பராக்!
ENG vs WI, 3rd Test: இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ரூட், ஸ்டோக்ஸ், ஸ்மித், வோக்ஸ்; விண்டீஸ் தடுமாற்றம்!
IRE vs ZIM, Only Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அயர்லாந்து!
TNPL 2024: நடராஜன், அஜித் ராம் அசத்தல்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி தமிழன்ஸ் அபார வெற்றி!
SL vs IND, 1st T20I: பயத்தை காட்டிய இலங்கை பேட்டர்கள்; பந்துவீச்சில் அசத்தி வெற்றிபெற்ற இந்தியா!
TNPL 2024: திருச்சி அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திரூப்பூர்!
SL vs IND, 1st T20I: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு!
MLC 2024 Final: வாஷிங்டன் ஃப்ரீடம் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; ஸ்பார்டன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கோரி ஆண்டர்சனின் கேட்ச்; வைரலாகும் காணொளி!
கம்பீருக்கும் எனக்கும் இடையே இருக்கும் பந்தம் சிறப்பு வாய்ந்தது - சூர்யகுமார் யாதவ்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31