Ban vs eng 2nd t20i
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து டி20 போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது டி20 போட்டி தாக்காவில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 25 ரன்கள் அடித்தார். பென் டக்கெட் 28 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே அதைவிட மோசமாக ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மெஹிடி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
Related Cricket News on Ban vs eng 2nd t20i
-
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 117 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31