Bcci council meeting: Cricket News & Match Updates
பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதன் 19ஆவது உச்ச கவுன்சில் கூட்டத்தில், இந்தாண்டு செப்டம்பரில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இரண்டாவது வரிசை ஆண்கள் அணியை அனுப்ப கிரிக்கெட் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இருப்பினும் கூட, மகளிர் அணி முழு பலத்துடன் அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. "2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சேர்ந்து வருவதால், உலகக் கோப்பையில் பங்கேற்காத வீரர்களில் இருந்து ஒரு அணியை தேர்வு செய்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுப்பும்" என்று பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Bcci council meeting - Tesst
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31