Domestic cricket
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் டி20 தொடரின் நடப்பு சீசனானது இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பரோடா அணி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அணியின் கேப்டனாக குர்னால் பாண்டியா செயல்படவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சாதாரண வீரராக இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்த ஆண்டு, குர்னால் பாண்டியா தலைமையில், பரோடா அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது.
Related Cricket News on Domestic cricket
-
SMAT 2024: சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணி அறிவிப்பு!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணியை அம்மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான யுபி அணி அறிவிப்பு; கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்!
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான உத்தரபிரதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பெங்கால் அணி அறிவிப்பு; ஷமிக்கு இடம்!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிப்பு!
சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்கும் 17 பேர் அடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை தொடரில் வரலாறு படைத்த அன்ஷுல் கம்போஜ்!
கேரள அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் ஹரியானா அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக கிரிக்கெட் விளையாடமால் இருந்த முகமது ஷமி, மத்திய பிரதேச அணிக்கு எதிரான தனது கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
முன்னணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை - இர்ஃபான் பதான் சாடல்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாததே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் மறைமுகமாக சாடியுள்ளார். ...
-
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விருத்திமான் சஹா!
நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார். ...
-
உள்ளூர் போட்டிகளில் விராட் கோலி விளையாட வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
சமீப காலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - சஞ்சு சாம்சன்!
என்னை வெறும் வெள்ளை-பந்து கிரிக்கெட்டுடன் மட்டுப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இரானி கோப்பை 2024: தனுஷ் கோட்டியான் அபார சதம்; கோப்பையை வென்றது மும்பை!
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
இரானி கோப்பை 2024: பிரித்வி ஷா அரைசதம்; வலிமையான இலக்கை நோக்கி மும்பை அணி!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இரானி கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட அபிமன்யூ ஈஸ்வரன்; 416 ரன்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆல் அவுட்!
மும்பை அணிக்கு எதிரான இரானி கோப்பை ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களில் ஆல் அவுட்டானது, முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31