England tour india 2024
IND vs ENG, 2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சன், பஷீர் ஆகியோருக்கு வாய்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சிற்கு பதிலாக அறிமுக சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on England tour india 2024
-
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகியுள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு நிச்சயம் அணியில் இடம் கொடுக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன், ஸ்ரேயாஸ் திறமையின் மீது எங்களுக்கு சந்தேகம் கிடையாது - விக்ரம் ரத்தோர்!
ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது விளையாட்டில் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 2nd Test: காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகும் ஜேக் லீச்? - சோயப் பஷீருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயத்தில் அவதிப்படும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரோஹித் சர்மா செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்- மைக்கேல் வாகன்!
முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
ஷுப்மன் கில் தனது ஃபுட்வொர்க் மற்றும் பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்தால் மட்டுமே அவரால் ரன்களைச் சேர்க்க முடியும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆலோசனை கூறியுள்ளார். ...
-
பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் - விராட் கோலியின் சகோதரர் வேண்டுகோள்!
தேவையில்லாத பொய்யான செய்திகளை ஊடகங்களும், ரசிகர்களும் பரப்ப வேண்டாம் என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி வேண்டுகொள் விடுத்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை - ஜெஃப்ரி பாய்காட்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய ஃபார்மில் இல்லை என்பதால், இங்கிலாந்து அணி இதனைப் பயன்படுத்தி 12 வருடத்தில் இந்தியாவை வீழ்த்தும் முதல் அணியாக மாறவேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் - மாண்டி பனேசர்!
அடுத்த நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியைக் கண்டு பயம் கொள்ளாமல் தங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இமாலய சாதனைக்கு காத்திருக்கும் அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியளில் இணையவுள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த இமாம் உல் ஹக்!
இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வுசெய்யப்பட்டுள்ள சர்ஃப்ராஸ் கானுக்கு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோருக்கு வய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விதிமுறையை மீறிய பும்ரா; அபராதம் விதித்த ஐசிசி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஐசிசி விதிமுறையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31