Tamil cricket news
IND vs AUS, 3rd Test: கவாஜா அரைசதம்; முன்னிலையில் ஆஸி!
இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் அபார பந்து வீச்சினால் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் குன்னமேன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும் நேதன் லியான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்திலேயே ட்ராவஸ் ஹெட் விக்கெட்டை இழந்தாலும் உஸ்மான் கவஜா மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர்.லபுசேன் பூஜ்ஜியத்தில் இருந்தபோது ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார் . ஜடேஜா அதை நோபால் ஆக வீசியதால் அதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழக்கவில்லை.
Related Cricket News on Tamil cricket news
-
BAN vs ENG, 1st ODI: வங்கதேசத்தை 209 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தூர் மைதானம் டெஸ்ட்டிற்கு உகந்ததல்ல - மேத்யூ ஹைடன்!
இந்தூர் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்தது அல்ல என முன்னால் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
ரவீந்திர ஜடேஜாவை பாராட்டிய ரவி சாஸ்திரி!
ஏனென்றால் வெளிநாட்டு மண்ணில் ஒருவரை தான் நாம் சுழற் பந்துவீச்சாளராக விளையாட வைக்க முடியும். அப்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
IND vs AUS, 3rd Test: சகட்டு மேனிக்கு திரும்பும் பந்து; வரிசையாக நடையைக் கட்டிய பேட்டர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ...
-
ஷர்துல் தாக்கூர் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த ரோஹித் சர்மா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஒத்திகையாக நான்காவது ஆட்டத்தை பயன்படுத்துவது சாத்தியம்தான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
SA vs WI, 1st test: மார்க்ரம் அபார சதம்; கடைசி நேரத்தில் சரிந்த தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது - ரிஷப் பந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்து அடைந்த பிறகு முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் பும்ரா?
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுளளது. ...
-
IND vs AUS: திறமையான வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் - ரோஹித் சர்மா!
அடுத்த போட்டியில் யார் அதிக ஓவர்களை வீசுவார்கள் என்பது ஆட்டத்தின் போக்கை பொறுத்தே முடிவு செய்யப்படும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ...
-
இரானி கோப்பை: ரெஸ்ட் அஃப் இந்திய அணியில் மேலும் ஒரு மாற்றம்!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் காயமடைந்த மயங்க் மார்கண்டேவுக்குப் பதிலாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஸ் முலானி தேர்வாகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31