Tamil nadu vs punjab
ரஞ்சி கோப்பை 2024: பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் சி பிரிவுக்கான போட்டி ஒன்றில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேலம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி பாபா இந்திரஜித், விஜய் சங்கர் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 435 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 187 ரன்களையும், விஜய் சங்கர் 130 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரான் சிங் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 24 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அன்மொல்ப்ரீத் சிங் - நெஹால் வதேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தி உயர்த்தினர்.
Related Cricket News on Tamil nadu vs punjab
-
ரஞ்சி கோப்பை 2024: முதல் இன்னிங்ஸில் சுருண்ட பஞ்சாப்; ஃபாலோ ஆனில் அபார ஆட்டம்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 16 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: விஜய் சங்கர், இந்திரஜித் அபாரம்; தடுமாறும் பஞ்சாப் அணி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; வலிமையான நிலையில் தமிழ்நாடு!
பஞ்சாப் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தமிழ்நாடு அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31